எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சுமத்தி மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த 17-ஆம் தேதி துத்தூர் பகுதியைச் சேர்ந்த மரியஜஸின் தாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் குமரி மற்றும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இவர்கள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது திடீரென விசைப் படகு பழுதாகியுள்ளது. இதனால் காற்றின் […]
