இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டமானது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் சட்ட அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியால் பல உயிரிழப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதன் எதிரொலியாக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு மனதாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
