Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: சாத்தியமுள்ள வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமரா வைக்கப்படும்… தமிழக அரசு உறுதி!!

உள்ளாட்சி தேர்தலில் சாத்தியமுள்ள வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும் எனக் கோரி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.. அதன் தொடர்ச்சியாக இன்று விசாரணைக்கு வந்தது. நேற்றைய தினத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.5000 சம்பள உயர்வு…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பேராசிரியர்கள் 1661 நபர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 11 மாதங்களாக மாதம்தோறும் 15,000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக பேராசிரியர்களின் தொகுப்பூதியத்தை ரூ.15000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020- 2021 ஆம் கல்வியாண்டில் 59 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியராக […]

Categories
மாநில செய்திகள்

புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு… செப்.,26  வரை 10. 54 லட்சம் பேர் விண்ணப்பம்!!

புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க கோரி செப்டம்பர் 26  வரை 10. 54 லட்சம் பேர் விண்ணப்பித்து  இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில், 7.28 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், 2.61 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கப்பட்ட விண்ணப்பங்களில் 6.65 லட்சம் பேருக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.. 63 ,661 ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடந்து வரும் நிலையில் 63, 780 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : ரவுடிகளை ஒடுக்க சட்ட மசோதா தயார் – தமிழக அரசு!!

இந்த நிலையில் ரவுடிகளை ஒடுக்க மசோதா தயார் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அதிரடியாக 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் அடுத்தடுத்து நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ரவுடிகளை ஒடுக்க மசோதா தயார் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. […]

Categories
அரசியல்

கொரோனா 3வது அலை…. ஒபிஎஸ் முதல்வருக்கு வைத்த கோரிக்கை…!!!

கொரோனா 3வது அலை  பரவாமல் இருப்பதற்கு, தமிழக அரசானது கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். கொரோனா 3வது அலை பரவலை குறித்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஏற்ற,இறக்கமாகவே உள்ளது. இந்நிலையில் வரும் 3வது அலையானது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அச்சத்தை போக்கும் வகையில் சமூக இடைவெளியை, அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகளிலும் கடைபிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை உள்ளே அனுமதிக்க கூடாது போன்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நகைக்கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய குழு அமைப்பு!!

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 சவரன் நகை கடன் மட்டுமின்றி 100% பொது நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சார்பதிவாளர், சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. சென்னை மண்டலத்தில் துணை பதிவாளர்களை கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து நவம்பர் 20க்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா?…. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது .அதன் பிறகு கொரோனா  பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும்  கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்துகொண்டு இருக்கின்றன . இந்நிலையில்  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக வளர்ச்சி துறை வெளியிடட்டுள்ள அறிவிப்பில், தேசத்தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தி பிறந்த […]

Categories
மாநில செய்திகள்

காவிரி உள்ளிட்ட நதிநீர் வழக்கு: வழக்கறிஞர் குழு நியமனம்!!

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மற்றும் அண்டை மாநில நதிநீர் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் வாதாட தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மற்றும் அண்டை மாநில நதிநீர் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாட 6 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது  தமிழக அரசு. அதாவது, மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, சேகர் நாப்டே, வி.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.இளங்கோ மற்றும் வழக்கறிஞர்கள் […]

Categories
மாநில செய்திகள்

‘பாரத் நெட்’ திட்டம்… ஆட்சியர்கள் தலைமையில் குழு… தமிழக அரசு உத்தரவு!!

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் இணைய வசதி ஏற்படுத்தும் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தை தமிழக அரசின் ‘பைபர்நெட்’ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 12,525 கிராமங்களுக்கு பாரத் நெட் திட்டத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் இணையதள வசதியை தமிழக அரசு செய்து தர உள்ளது. பாரத் நெட் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு!!

தமிழ்நாட்டில் 10 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றது முதல் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.. அந்த வகையில், தற்போது தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. ஜெயந்த் முரளி, அபய்குமார் சிங், நிஷா உள்ளிட்ட 10 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுதப்படை ஏடிஜிபி ஆக இருந்து வந்த ஜெயந்த் முரளி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு […]

Categories
மாநில செய்திகள்

நகைக் கடன் மோசடி : “ஒரே இடத்தில் பணியாற்றுவதால் குளறுபடி” – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் மதுரை, சிவகங்கை திருவண்ணாமலை, தர்மபுரி, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெற்ற நகைக்கடன் மோசடிகளை தமிழக அரசு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மேலும் தர்மபுரி மாவட்டம் பாளையம், சேலம் காடையம்பட்டு கூட்டுறவு சங்கங்களில் ஒரே நபர் 2425 கிராம் நகைகளை ரூபாய் 72 .39 லட்சம் நகைக்கடன் பெற்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் ஒரே குடும்பத்தினர் 614 நகைக்கடன் 1.63 கோடிக்கும், மற்றவர்கள் ரூபாய் 2.46 நகைக்கடன்களை ஒரே ஆதார் எண்ணை வைத்து நகைக்கடன் பெற்றிருக்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. யாருக்கெல்லாம் கிடைக்கும்?…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் அடிப்படையில் 5 வகையான குடும்ப அட்டைகள் உள்ளன. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 2,13,80,112 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இந்நிலையில் தமிழக அரசு தேர்தலின்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அறிவித்துள்ளது. இதனால் புதிதாக திருமணம் செய்தவர்கள் இந்தத் தொகையை பெறுவதற்காக பலரும் புதிதாக ரேஷன் கார்டு அப்ளை செய்து வருகின்றனர். மேலும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் கூட்டத்தின்போது. ஆயிரம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல்? – அரசு சொன்ன பதில்!!

மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கொரோனா பரவும் மையங்களாக மாறவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு மற்றும் அனைத்து வகையான கல்லூரிகளும் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இதற்கிடையே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சில பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகின்றது.. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பயம் […]

Categories
மாநில செய்திகள்

9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு போக்குவரத்து இணை ஆணையர் பாலகிருஷ்ணன் […]

Categories
மாநில செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்புக்கு வலியுறுத்தப்படும் – தமிழக அரசு!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடத்த ஒன்றிய அரசுக்கும் வலியுறுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.. சட்டமன்றத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது.. இதில், பிற்படுத்தப்பட்டோர் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடத்த ஒன்றிய அரசுக்கும் வலியுறுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.. தொடர்ச்சியாக சட்ட பேரவையில் […]

Categories
மாநில செய்திகள்

புத்தகப் பையில்…. அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை அச்சிட வேண்டாம்… உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!!

பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் கட்சித் தலைவரின் படத்தை அச்சிட்டு அரசு நிதியை தவறாக பயன்படுத்தக்கூடாது சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரது படங்களுடன் அச்சிடப்பட்டிருக்கும் நோட்டுப் புத்தகங்கள், பைகள் கிடப்பில் போடப்பட்டதாகவும், அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டதாகவும் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வழக்கு தொடரப்பட்டது.. அந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

கடைகளில் நின்று பணியாற்றுபவர்கள் இருக்கைகளில் அமரலாம் – அமைச்சர் அதிரடி!

தமிழகத்தில் கடைகள், நிறுவனங்களில் நின்று பணியாற்றும் பணியாளர்களுக்கு இருக்கைகள் வழங்குவதற்கான சட்ட முன்வடிவு சட்ட பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன், 1947 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்து, சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார்.. செப்டம்பர் 13ஆம் தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் இது நிறைவேற்றப்பட இருக்கிறது.. தமிழத்திலுள்ள பெரும்பாலான கடைகள் மற்றும்  நிறுவனங்களில் பணிபுரியக் கூடிய தொழிலாளர்கள் வேலை நேரம் முழுவதுமாக […]

Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் – தமிழக அரசு.!!

நாளை மறுநாள் (செப் 1) முதல் திட்டமிட்டபடி  பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இன்று காலை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் கொரோனா தொற்று குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் செப்.15 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  தமிழக அரசு தெரிவித்துள்ளது.. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், கடற்கரைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் செல்ல அனுமதியில்லை..  நாளை மறுநாள் (செப் 1) […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும்…!!

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும், அதனால் மீண்டும் இதில் மறு மதிப்பீட்டு முறையை நடத்தப்படாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு மொத்தம் இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 23 முதல்…. “திரையரங்குகளை திறக்கலாம்”… வெளியான அறிவிப்பு..!!

ஆகஸ்ட் 23 முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் நாளை மறுநாள் (23ஆம் தேதி) காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூடுதல் தளர்வுகள் அளிப்பது மற்றும் மேலும் நீட்டிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.. இந்த ஆலோசனையின் முடிவில் மேலும் 2 வாரங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை […]

Categories
மாநில செய்திகள்

இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டில்…. சிறப்பான 10 முக்கிய அறிவிப்புகள்….!!

தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வரலாற்றை பதிவு செய்யும் வகையில்… அமைக்கப்பட்ட அருங்காட்சியகம்… இடம்பெற்ற பழங்கால பொருட்கள்…!!

தேனி மாவட்டத்தின் வரலாற்றை பதிவு செய்திடும் வகையில் தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயற்கை வளத்தில் எழில் கொஞ்சும் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தின் வரலாற்றை பதிவு செய்திடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 2 மாடிகள் கொண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேனி மாவட்டத்தின் இயற்கை, கலை, இலக்கியம், பண்பாடு, சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு…? முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!

முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களிடம் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடியுங்கள் என்று வலியுறுத்தி கேட்டுள்ளார். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்று குறைந்ததன் காரணமாக, தமிழக அரசு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளை அறிவித்தது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் சென்று வருகின்றனர். மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க தவறுகின்றனர். இது தொடர்ந்து நடைபெற்று வந்தால் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: ரூ. 2000… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. கொரோனா தீவிரமாக பரவி வந்த நேரத்தில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக எந்த வித இன்னல்களையும் சந்திக்க கூடாது என்பதற்காக ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம், இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

BigNews: தமிழகத்தில் தீவிர ஊரடங்கு…. முதல்வர் கடும் உத்தரவு…!!!

புதிதாக எந்த விளைவுகளும் இன்றி ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  கூட்டம் சேர்வதை தவிர்ப்பதற்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஊரடங்கு மீட்கப்பட்டுள்ள நிலையில் சில பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேர்வது தொடர்ந்து கண்காணிக்கபட்டால் அப்பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர்கள் நடவடிக்கை எடுக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு விதிமுறைகளை […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு… மகிழ்ச்சி செய்தி…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படியை 17 விழுக்காட்டில் இருந்து 28 விழுக்காடாக உயர்த்துவதற்கு அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு முதலே கொரோனா காரணமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 7ஆம் சம்பள கமிஷனின் கீழ் 17% அகவிலைப் படி வழங்கப்படுகிறது. அகவிலைப் படி உயர்வுக்கு அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளதால் இனி 28% அகவிலைப்படி கிடைக்கும். இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை வழங்கவும், அகவிலைப்படியை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முதல்வர்… சற்று முன் அதிகாரப்பூர்வ அதிரடி உத்தரவு…!!!

கல்வி சேர்க்கையில் வன்னியர்கள், சீர்மரபினர், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப்பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீடு வன்னியர்கள் சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு சட்டம் 8/2021 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் அடிப்படையில் அரசு பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இன சுழற்சி முறையை திருத்தி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் தளர்வு… தமிழகத்தில் ரத்து… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இ பாஸ் இல்லாமல் செல்லலாம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. பின்னர் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அவ்வப்போது அறிவித்து வந்தது. அதன்படி இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் பல அதிரடியான திட்டங்களையும் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்… அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற புதிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக பல மாவட்டங்களிலும் தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், தற்போது தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் ஐந்தாம் தேதி முடிவடைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து சேவை… புதிய அறிவிப்பு…!!!

சென்னையிலிருந்து இன்று முதல் கூடுதலாக 100 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக தொற்று படிப்படியாக குறைந்த காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஜூன் 28-ஆம் தேதி தமிழகத்தில் பேருந்துகள் 28 மாவட்டங்களில் மட்டும் இயக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து 300 அரசு விரைவு பேருந்துகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் மறுவாழ்வு மையம்… விஜயபாஸ்கர் வரவேற்பு…!!!

கொரோனா சிகிச்சை முடிந்தவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் அவர்கள், தொடர் கண்காணிப்பில் இருக்கும் வகையில் மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதை ஏற்று தமிழக அரசு மறுவாழ்வு மையம் திறக்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

Flash News: ஊரடங்கு நீட்டிப்பு… இ பாஸ் – தமிழக அரசு கடும் உத்தரவு…!!!

நேற்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கர்நாடக எல்லையில் இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அமலுக்கு வந்தது. இந்த தளர்வுகளில் சில மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தது. மேலும் 50% பயணிகளுடன் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு ரயில் சேவைக்கு மட்டுமே அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 2,000 கோடி மதிப்பிலான பத்திரங்கள் ஏலம்… தமிழ்நாடு அரசு…!!!

ரூ. 2,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை ஏலம் விடுகின்றது தமிழ்நாடு அரசு. ரூ. 2,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மூலம் நாளை மின்னணு முறையில் ஏலம் நடைபெறுகிறது. நிதி பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது 2000 கோடி மதிப்பிலான […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக பள்ளிகளில்… சற்றுமுன் அதிரடி உத்தரவு…!!!

பெற்றோர் ஆசிரியர் சங்க இணைப்பு கட்டணத்தை விட கூடுதலாக விண்ணப்பக் கட்டணம் வசூலிக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இன்றி தேர்ச்சி என்றும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு பதினோராம் வகுப்பு சேர்க்கை நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் தற்போது 27 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டில் தளர்வுகள் திரும்பப் பெற வாய்ப்பு… அதிர்ச்சி…!!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால் சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடு வரும் திங்கட்கிழமை, அதாவது ஜூன் 28ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், புதிய தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்டா பிளஸ் வேகமாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு தலைமை செயலகத்தில் இருந்து விழிப்புணர்வு வீடியோவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா சுப்பிரமணியன் தமிழகத்தில் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னையில் செவிலியர் ஒருவருக்கும், மதுரை, காஞ்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இரண்டு பேருக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 சிறை கண்காணிப்பாளர்கள் மாற்றம்…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் 5 சிறை  கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் புழல் உட்பட 5 சிறைச் சாலைகளுக்கு புதிதாக கண்காணிப்பாளர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.  கடலூர் சிறை […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 17ஆம் தேதி வரை… உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்…!!!

ஜூன் 17ஆம் தேதி வரை மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகள் குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பரவி வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொ ற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகின்றது. மேலும் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.  தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய தடுப்பூசி குறித்த விவரங்களை […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி… உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு…!!!

மாற்றுதிறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பரவி வரும் தொற்று காரணமாக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தடுப்பூசி செலுத்தும் முன்னுரிமை பட்டியலில் மாற்றுத்திறனாளிகளின் பெயர்களை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் +1 மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து தமிழக அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பிறகு மத்திய அரசு பிளஸ் 2 சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததையடுத்து, தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி, +2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

கட்டணம் நிர்ணயம்… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…!!!

தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிறகு பல மாவட்டங்களில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் சில மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ள காரணத்தினால் மக்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது என்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு இல்லை… வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு இருந்ததால் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து வருகின்றது. தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்படுவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அதன் பிறகு தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு வரும் 14-ம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 2023 வரை பணி நீட்டிப்பு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தரம் உயர்த்தப்பட்ட 19 உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 95 ஆசிரியர்களுக்கு 2023 வரை பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட 19 உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 95 ஆசிரியர்களுக்கு 2023 வரை பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2016 – 17 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் 19 நடுநிலைப்பள்ளிகளை அரசு உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவ்வாறு தரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும்… அரசு அடுத்த அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாடு முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 27 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த சில நாட்களாக ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு எஸ்.பி.யாக விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சுதாகர், திருப்பத்தூர் எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி, ராணிபேட்டை எஸ்.பி.யாக ஓம் பிரகாஷ் மீனா, திருவண்ணாமலை […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களிலும்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்வது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம். புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில், தமிழகத்தில் தற்போதுவரை வழக்கத்தைவிட 56% அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஓரிரு தினங்களில்… சென்னை, மதுரை, திருவாரூரில் வெளியாகப்போகும் செம அறிவிப்பு…!!!

சென்னை, மதுரை, திருவாரூரில் தமிழக அரசு பல திட்டங்களை கொண்டு வர உள்ளது. அதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்தாலும் தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் தமிழக அரசு செய்து கொண்டு வருகின்றது. தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். அதன்படி, தென்சென்னையில் ரூபாய் 300 கோடி மதிப்பில் சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: +2 பொதுத்தேர்வு ரத்து…? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு குறித்து தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி சிபிஎஸ்இ  +2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தெரிவித்தார்.  நாடு முழுவதும் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த முடிவுகள் இன்று எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

9 10 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரகம் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது: ” தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வு மற்றும் 10 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல் வெளியீடு…. தமிழக அரசு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பல தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இதனை சரி செய்ய தமிழக அரசு கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 க்கும் அதிகமாக […]

Categories

Tech |