அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாநில அரசின் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக செயல்படுகிறார் என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, “மாநில அரசின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், தமிழக அரசிடம் அனுமதி பெறாமல், மத்திய அரசுக்கு எப்படி நேரடியாக கடிதம் எழுதினார்? அல்லது துணைவேந்தருக்கு தமிழக அரசு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறதா?. இதற்கு தமிழக அரசு ஒரு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். […]
