மதுரை ஹைகோர்ட்டில் மகேஷ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கொசுக்களால் மலேரியா, சிக்கன் குனியா போன்ற பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. கொசுக்களின் உற்பத்தி தற்போது அதிகரித்துவிட்ட நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கு போதுமான அளவு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே அதிநவீன மருந்துகளை பயன்படுத்தி கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். அதன் பிறகு கொசு கட்டுப்பாட்டு மையத்தில் நிரந்தர ஊழியர்களை பணியில் அமர்த்துவதோடு, கொசு கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு […]
