Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் சென்று திரும்பிய 43 வயது நபருக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. டெல்லி சென்று திரும்பிய 5 பேரில் 3 பேருக்கு விழுப்புரத்திலும், 2 பேருக்கு மதுரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 6 பேர் டிஸ்சார்ஜ்…… குணமடைந்தவர்கள் 11ஆக உயர்வு …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்ததால் இதன் எண்ணிக்கை 67ஆகியது. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் மேலும் 6 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். சென்னையை சேர்ந்த 4 […]

Categories
அரசியல்

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா உறுதி!

டெல்லியில் தனியார் அமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 1,500 பேர் பங்கேற்றுள்ளனர். அதில் தற்போது 981 நபர்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 16 பேருக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் நாகபட்டினத்தை சேர்ந்த 1,500 பேர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் தனியார் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு […]

Categories
அரசியல்

போருக்கு ஆயுதம் இன்றி அனுப்புவது நியாயமா? அரசை விமர்சிக்கும் கமல் …!!

கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 67ஆக அதிகரித்துள்ளது. மிக வேகமாக பரவும் கொரோனா தொற்று இன்று ஒரே நாளில் மட்டும் 17 பேரை பாதித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதில் மருத்துவர்களுக்கு தேவையான உடைகள், மருத்துவ சாதனங்கள் இல்லை என்ற குற்றசாட்டு எழுந்தது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் வீட்டின் வாடகை கிடையாதா ? முதல்வர் பதில் …!!

தமிழகத்தில் வீட்டின் வாடகையை உரிமையாளர்கள் வாங்க கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை அத்தியாவசியதேவைகளை தவிர அனைத்தும் முடங்கியுள்ளதால் பொருளாதார ரீதியாக பல்வேறு வகையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் டெல்லி மாநில முதல்வர் அடுத்த 3 மாதங்களுக்கு வீட்டு வாடகையை கேட்டு கட்டாயப்படுத்த வேண்டாம், அவர்கள் கொடுக்கவில்லை என்றால் டெல்லி அரசு உங்கள் வீட்டின் வாடகையை கொடுக்கும் என்று வீட்டின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1.5 கோடி மாஸ்க் ஆர்டர் செய்துள்ளோம் – முதல்வர் தகவல் ….!!

1.5 கோடி முகக் கவசங்கள் (MASK) ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பணிகளை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 பேர் குணமடைந்துள்ளனர், கொரோனா அறிகுறியுடன் 1,925  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். மாவட்ட வாரியாக நிலைமையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா – அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று 1,024 பேருக்கு உறுதி செய்யப்பட்டதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். 96 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தை பொறுத்த வரை 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்து 5 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு : திமுக சார்பில் 1 கோடி நிவாரணம்…. தமிழக அரசிடம் கொடுக்கிறது …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திமுக சார்பில் 1 கோடி நிதி வழங்கப்படும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் ஐந்து பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ நடவடிக்கை ….!!

வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் தமிழகத்தில் சிக்கி தவிக்கின்ற நிலையில் வெளிமாநில தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட இரண்டு குழு அமைக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான இருப்பிட வசதி, உணவு வசதி, மருத்துவ வசதியை வேலை பார்த்த நிறுவனங்கள் உறுதி படுத்த வேண்டும். இதனை மாவட்ட […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி..! தமிழகத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா ….!!

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.அதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் இன்று மேலும் […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஈரோட்டில்..!! ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா” ஒரே குடும்பத்தில் 4 பேர் …!!

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.அதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் இன்று மேலும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மாசம் 10,000 ரூபாய்….! ”3 மாசம் 30,000 ரூபாய் கொடுங்க” – எச்.ராஜா வேண்டுகோள் ….!!

ஊரடங்கால் வேலையில்லாமல் இருக்கும் பூசாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா வேண்டுகோள் வைத்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகத்திலும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள்  வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: குமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா இல்லை- தமிழக சுகாதாரத்துறை

கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார்.இந்நிலையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் 66 வயது முதியவருக்கு சிறுநீரக நோய் இருந்ததாகவும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா இருக்கா ? உடனே போன் போடுங்க – இதான் நம்பர் ….!!

கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகளுக்கு விளக்கம் பெற போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சமூக விலகலை கடைபிடிக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 42 பேர் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிகை 42 ஆக உயர்ந்துள்ளது. #CoronaUpdate: #Covid_19 positive confirmed for 25 Y M from West Mambalam, Chennai. Pt is undergoing treatment in isolation at a Private Hospital. His condition is stable @MoHFW_INDIA @CMOTamilNadu […]

Categories
அரசியல்

BREAKING : வருகிற 3 ஆம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருக்கும்!

வருகிற 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள்  வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ 1000 வழங்கப்படும் என அறிவித்தது. இந்த நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 1000 […]

Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள்

2 வயது குழந்தை உட்பட 5 பேர் பலி…. குமரி கொரோனா வார்டில் அதிர்ச்சி …!!

கன்னியாகுமரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2 பேர் இறந்த நிலையில் இன்று மட்டும் அடுத்தடுத்து 3 பேர் […]

Categories
அரசியல்

ஹோட்டல்கள் நாள் முழுவதும் இயங்கலாம் – முதல்வர் அறிவிப்பு …!!

தமிழக்கத்தில் ஹோட்டல் முழு நேரமும் செயல்படலாம் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதே நிலைதான் தமிழகத்திலும் நீடித்தது.ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த நிலை நீடித்து  வந்த நிலையில் தேவையில்லாமல் மக்கள் […]

Categories
அரசியல்

Swiggy, Zomato, Uber Eats செயல்பட அனுமதி – முதல்வர் அறிவிப்பு …!!

Swiggy , Zomato , Uber Eats உணவு விநியோக நிறுவனங்கள் செயல்பட முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதே நிலைதான் தமிழகத்திலும் நீடித்தது.ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த நிலை நீடித்து  வந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளுக்கு நேர கட்டுப்பாடு ….!!

அத்தியாவசிய பொருட்களை விற்க கூடிய கடைகளுக்கான இந்த நேர கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. கொரோனா நோய் தொற்று  பொதுமக்களுக்கு பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகின்றது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமல் இருக்கக் கூடிய நிலையில் தற்போது காய்கறி, மளிகை கடைகளில் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (29.03.2020) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கோயம்பேடு போன்ற மொத்த […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது – முதல்வர் பழனிசாமி விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் தமிழகத்தில் 144 தடை ஏப்., 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்ய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது என […]

Categories
அரசியல்

கொரோனா ஊரடங்கு : போலீஸ் நடவடிக்கை – விளாசிய தலைமை நீதிபதி …!!

தனிமைப் படுத்துதல் என்பது சிறைவாசம் அல்ல என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரைஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவதையில்லாமல் கூட்டமாக கூட கூடாது. அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே வரவேண்டும் என்ற அறிவுறுத்தல் இருந்தும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெளியே வந்தனர். தேவையில்லாமல் வாகனங்களை சுற்றுவதனால் கொரோனா பரவும் என்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

530 மருத்துவர்கள்…. 1000 செவிலியர்கள்…. 200 ஆம்புலன்ஸ்…. முதல்வர் ஆணை ….!!

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுளார். கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் குணமடைந்து வீடு திரும்ப உள்ளார். இந்தநிலையில் வேகமாக பரவி வரும் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா…. பாதிக்கப்பட்டவர்கள் 35 ஆக உயர்வு ..!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 29 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது. அதில், மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில், மதுரையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி … பாதிப்பு எண்ணிக்கை 35ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவால் 29 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 6 new positive cases of #Covid19 in TN, 2 family contacts from #MDU #CN12, 2 contacts from #Erode CN5,6 ,1 contact of CN14 of Chennai, 1 25yr old fem, […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… தமிழகத்தில் காய்கறிகள் சந்தையாக மாறும் பேருந்து நிலையங்கள்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்திலும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கபட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் அரண்மனை, சாலை தெருவில் செயல்பட்ட சந்தைகள் தற்காலிகமாக இட மாற்றம் செய்யபட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க சந்தைகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா…. பாதிக்கப்பட்டவர்கள் 29ஆக உயர்வு ..!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை ஒருவனா வைரசால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் உயர்ந்துள்ளது. முன்னதாக  காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மதுரையை சரிந்த நபர் உயிரிழந்துள்ள நிலையில் உத்தரப் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திருச்சி வாலிபருக்கு கொரோனா பாதிப்பு… தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்வு!

தமிழகத்தில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. #UPDATE: One new #COVID19 positive case reported from Trichy. 24 Y Male, Dubai Return at #Trichy GH. Pt in isolation & stable. @MoHFW_INDIA @CMOTamilNadu #TNHealth — Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 26, 2020 துபாயில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – 27ஆக உயர்வு …!!

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 27 ஆக அதிகரித்து உள்ளது . தற்போது துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் உடல்நிலை சீராக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். #UPDATE: One new #COVID19 positive case reported from Trichy. 24 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1,100 வழக்குகள் பதிவு!

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா  வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் நாள் அதிகரித்து வந்த நிலையில், தமிழக அரசு 144 தடை உத்தரவை நேற்று முன்தினம் அமல்படுத்தி, அததியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என்றும் வலியுறுத்தியது. இருப்பினும், நேற்று பல நகரங்களில் ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடினார்கள். அவர்களை காவல்துறை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தார்கள். சில இடங்களில் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதங்கள் செய்தனர் இந்த நிலையில், 144 […]

Categories
அரசியல்

தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுபாடின்றி கிடைக்கும் – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுபாடின்றி கிடைக்கும் என்பதால் பொது மக்கள் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவின் பாலகங்களுக்கு சென்று பொதுமக்கள் நேரடியாக தேவையான பாலை வாங்கிக்கொள்ளலாம். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பால் தங்கு தடையின்றி கிடைக்க […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே தனியார் பால் விற்பனை என அறிவிப்பு!

தமிழகம் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே தனியார் பால் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் பால் முகவர்களின் கடைகளில் மட்டும் அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளனர். போலீஸ் கட்டுப்பாட்டை தொடர்ந்து நாளை முதல் பால் முகவர்கள் சில்லறை கடைகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
அரசியல் சற்றுமுன்

பேரிடராக அறிவிங்க …. நிதி போதாது…. தனித்திரு, விழித்திரு – முக.ஸ்டாலின் வேண்டுகோள் ..!!

கொரோனா வைரசால் தமிழகத்தில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முக.ஸ்டாலின் பல்வேறு வேண்டுகோளை வைத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் , உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸால் தினசரி கொத்து கொத்தாக மனித உயிர்களை இழந்து கொண்டிருக்கின்றோம். நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்திய பிரதமர் மோடியின் உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்த சலுகைகள் திட்டங்களை வரவேற்கின்ற அதே சூழ்நிலையில் இவை போதுமானதல்ல. தொழிலாளர்கள், சிறு வணிகர்களால் […]

Categories
அரசியல்

கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 8 பேர்….. தமிழகத்தில் 26ஆக உயர்வு ….!!

தமிழகத்தில் மேலும் இரு 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பூரண குணமடைந்து வீட்டில் மருத்துவர் ஆலோசனையில் இருக்கின்றார். மதுரையை சேர்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் 21 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் உத்திரபிரதேசம் ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் குணமடைந்து விட்டதாகவும், இன்னும் 2 நாளில் வீடு திரும்புவார் என்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் 26 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பல்வேறு நவடிக்கைகளை மேற்கொண்டு வந்த தமிழக அரசு, நேற்று 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. மேலும் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா ….!!

தமிழகத்தில் மேலும் இரு 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சற்று முன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வெளியிட்டிருந்தார். அதில் டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா பாதிப்ப ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து விட்டதாகவும் , இன்னும் 2  நாட்களில் வீடு திரும்புவார் என்று தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தற்போது வருந்தத்தக்க செய்தியாக தமிழகத்தில் மேலும் 3 […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

என் வீட்டை எடுத்துக்கோங்க, அரசு அனுமதிக்காக காத்திருக்கும் கமல் …!!

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க என் வீட்டை நான் தருகின்றேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் தமிழகத்தில் 15,492 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா அறிகுறியுடன் இருந்த 110 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுக்கு காத்திருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த நெருக்கடி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 23ஆக உயர்வு – அமைச்சர் உறுதி ….!!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்ததுள்ளது. தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில் மூலமாக உறுதி செய்திருக்கிறார். இவர்கள் ஐந்து பேரில் 4 பேர் இந்தோனோசியாவில் இருந்து சுற்றுலாவிற்காக தமிழகம் வந்துள்ளார்கள். இவர்களில் ரத்த மாதிரிகள் சென்னையில் வந்து சோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்கள் கடந்த 22ம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்களுக்கு சேலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா அச்சம்… தனித்தனி வீட்டில்… தனிமையில் தவிக்கும் கமல் குடும்பத்தினர்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நடிகர் கமல் ஹாசனின் குடும்பம் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டனர். உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க நோய்த்தொற்று இருப்பவர்களும், வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களும் தங்களைதாங்களே  14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக லண்டன் சென்ற நடிகை ஸ்ருதிஹாசன் தன்னைத்தானே தனிமைபடுத்திக்கொண்டுள்ளார். அதேபோல், அவரது தாயார் சரிகா மும்பையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ 83,52,000 நிதியுதவி… ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவி செய்த பிரபலங்கள் யார் தெரியுமா?

கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் ரூ 83,52,000 நிதியுதவியாக வழங்கியுள்ளனர். இந்தியாவில் குடியேறி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் பெரும் நஷ்டமடைந்துள்ளன. இந்த வைரஸ் தமிழகத்திலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், திரைப்படத்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களுக்கு நடிகர் மற்றும் நடிகைகள் உதவ வேண்டும் என்று ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயவுசெய்து ரிஸ்க் எடுக்காதீங்க… நம்ம எல்லோருக்கும் தெரியும்… கொரோனா குறித்து மதுமிதாவின் அறிவுரை வீடியோ!

நடிகை மதுமிதா கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை 530க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் இருக்க, இன்று முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று மக்களிடம் உரையாற்றும் போது வலியுறுத்தியுள்ளார். இதனை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும் என்று திரைத் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஓன்று கூடிய மக்களை விரட்டியடித்த போலீஸ் – விருதுநகரில் பரபரப்பு …!!

அருப்புக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி ஒன்றுகூடிய பொதுமக்களை போலீசார் விரட்டியடித்தனர். இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் முழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவோட சீரியஸ் புரியாம நிறைய பேர் இருக்காங்க… வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

நாம் அனைவரும் வீட்டுக்குள்ளேயே  இருந்து கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாப்போம் என்று கூறி நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோவெளியிட்டுள்ளார்.   இந்தியாவில் தீயாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இதுவரையில் 530 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே திரைத்துறை பிரபலங்கள் பலரும் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மக்களும் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும், வீட்டை விட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 இடங்களில் கொரோனா சிகிச்சை மருத்துவமனை …!!

தமிழகத்தில் 4 இடங்களில் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை அமைய இருக்கின்றது.   இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

JUST NOW : சென்னையில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம் ….!!

சென்னையில் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து நாடு முழுவதும் 21 நாளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாநிலத்திலும் உள்ள மாவட்ட எல்லைகள் மூடபட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதியில் நேற்று மாலை 6 மணி முதலே போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் சென்னையில் மட்டும் 200 போக்குவரத்து இயக்கப்பட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் தயார் நிலையில் 200 ஆம்புலன்ஸ்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் ..!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் 100 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நாட்டையே ஆட்டி படைக்கின்றது. நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சுகாதாரத்துறை அமைசர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமே 18 பேர்க்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 பேருக்கு மேல் கூடகூடாது – மீறினால் நடவடிக்கை …!!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அடுத்து இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவை அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. பொது மக்கள் நலன் , பாதுகாப்பு , பொது அமைதியை நிலைநாட்டும் பொருட்டு 144 தடை உத்தரவு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : கொரோனா எதிரொலி : அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு …!!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமுலுக்கு வந்தது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அடுத்து இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவை அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதனால் 5 பேருக்கு மேல் கூட கூடாது. அதுமட்டுமல்லாமல் மாவட்ட எல்லைகள் தற்போது 6 மணி முதல் மூடப்படுகின்றன.இதன் மூலமாக மாவட்ட போக்குவரத்து , மாநில போக்குவரத்து முழுவதுமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 144 தடை உத்தரவு அமல்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்துவது குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாக உள்ள நிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 144 தடை தடை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து துறை செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எவ்வித […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

15KG அரிசி, 1KG பருப்பு, 1LIT எண்ணெய்… பிற மாநிலத்தவருக்கு கைகொடுக்கும் தமிழகம் …!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி காலை வரை தொடரும் இந்த தடை உத்தரவால் முற்றிலும் பாதிக்கப்படும் தினக்கூலியை சேர்ந்தவர்கள் , அமைப்புசாரா தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்த கேள்விகள்  பல எழுந்தனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு நிவாரண அறிவிப்புகளை மேற்கொள்ள 60 , 500 கோடிகளை ஒத்துக்கி […]

Categories

Tech |