தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக 700க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. அரியலூரில் ஒரே நாளில் புதிதாக 188 பேருக்கு கொரோனா […]
