விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு மணிவிழா நடத்தினர். அதில் பேசிய திருமாவளவன், முதலாளித்துவ ஆதிக்கம் எப்படி சமூகத்தில் வெளிப்படுகிறதோ, சாதி ஆதிக்கம் எப்படி சமூகத்தில் வெளிப்படுகிறதோ அப்படி பாலின ஆதிக்கம், ஆண் ஆதிக்கம் என்பதும் சமூகத்தில் வெளிப்படும். அது குடும்பத்திலும் இருக்கும், சமூகத்திலும் இருக்கும், ஒரு கட்சியிலும் இருக்கும். அப்படி இல்லாமல் இருக்க முடியாது. ஒட்டுமொத்தமாக சமூகத்திலிருந்து துடைத்தெரியப்படுகின்ற போது தான் அது குடும்பத்திலும் இல்லாமல் இருக்கும், கட்சியிலும் இல்லாமல் […]
