Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு உச்சகட்ட அலர்ட்…. யாரும் வெளியே போகாதீங்க…. எச்சரிக்கை…!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி!…. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை…? என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு…..? முழு லிஸ்ட் இதோ…..!!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன் பிறகு சென்னையில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ள நிலையில், மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதோடு, பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ் பாடங்களை நடத்த யாரை வேணாலும் அனுமதிக்கலாமா?”…. ராமதாஸ் சரமாரி கேள்வி….!!!!

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் இலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியர்கள் தான் தமிழ் பாடங்களை நடத்த முடியும். எந்த ஆசிரியரும் தமிழ் பாடங்களை நடத்த அனுமதிக்கலாமா என அரசுக்கு ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு செய்வதைவிட தமிழ் மொழியை அவமதிக்க முடியாது; தமிழை கட்டாயப்பாடமாக்கியதன் நோக்கத்தை இது சிதைத்து விடும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்களை நடத்துபவர்கள் தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் பொறியியல் படிப்புகளுக்கு 51 பாட வேலைகள் […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும்…. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு…..!!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.மாண்டஸ் புயல் காரணமாக மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அட!…. தமிழகத்தில் இவ்வளவு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்குதா…. உங்க மாவட்டத்தில் எத்தனை இருக்குன்னு பாருங்க….!!!!!

இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்த்தெடுப்பதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக எம்.பி செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி தற்போது வரை சென்னையில் அதிகபட்சமாக 661 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கிறது. அதன் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

திருச்சி மாவட்டத்தில் நாளை (09ஆம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

திருச்சியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். அதேபோல மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் விடுமுறை அறிவித்துள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, […]

Categories
மாநில செய்திகள்

சென்னையை நெருங்கும் மாண்டஸ் புயல்… தமிழகம் புதுச்சேரிக்கு, நாளை ரெட் அலர்ட்…!!!!

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக உருவாகி நேற்று இரவு 11.30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இந்த மாண்டஸ் புயலானது நகரும் வேகம் மணிக்கு சுமார் 6 கிலோ மீட்டராக குறைந்திருக்கிறது. இந்நிலையில் காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கு 530 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 620 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனையடுத்து மாண்டஸ் புயல் வருகிற […]

Categories
மாநில செய்திகள்

1 பள்ளிக்கு 2 டீச்சர் தான் இருக்காங்க…. வேதனை பட்டு ட்விட் போட்ட ராமதாஸ் ..!!

25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட் போட்டுள்ளார். 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். — Dr S RAMADOSS (@drramadoss) December 8, 2022

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம்….. இன்றே கடைசி நாள்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் நவம்பர் மாதம் நான்கு நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள டிசம்பர் எட்டாம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசளிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஜனவரி 3ஆம் தேதி வரை தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழக முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி: இன்று(டிச…8) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

15 கிமீ வேகத்தில், இன்னும் சற்று நேரத்தில்…. தமிழகத்தை நோக்கி வரும் புயல்…. அலர்ட்டா இருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்நிலையில் 770 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் இருந்து15 கிலோ மீட்டர் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. தமிழக மக்களே… இனி எல்லாமே உங்க வீடு தேடி வரும்…. அரசு தொடங்கிய புதிய திட்டம்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு உதவும் வகையிலான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்களின் சிரமத்தை போக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்துறை சார்பாக வீடு தேடி வரும் 20 நடமாடும் காய்கனி அங்காடித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக கோவை, திருச்சி, செங்கல்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

முதல்முறையாத ரயிலில் பயணம் செய்யும் முதல்வர் ஸ்டாலின்…. அதில் என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?…. கேட்டா ஆடிப் போயிருவீங்க….!!!!

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பல மாவட்டங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதேசமயம் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தும் புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டையும் வரும் பட்சத்தில் சென்னையிலிருந்து விமானம் மூலமாக அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி தென்காசி செல்கிறார். அதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து பொதிகை ரயில் மூலமாக தென்காசி பயணம் மேற்கொள்கின்றார். […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகம் முழுவதும் போலீசாருக்கு பரந்த உத்தரவு…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. சென்னையிலிருந்து 830 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய லிங்க் வெளியீடு…. தமிழக மின்வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. அதனால் இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின்வாரிய இணையதள பக்கத்திற்குச் சென்று அதற்கான பக்கத்தில் பதிவு செய்த அலைபேசி எண்ணை முதலில் பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் அனுப்பப்பட்ட பிறகு அந்த எண்ணை இணையத்தில் பதிவிட்ட பிறகு ஆதார் இணைக்கும் பக்கத்திற்கு செல்லும். அதில் வீட்டு உரிமையாளர் […]

Categories
மாநில செய்திகள்

சைபர் கிரைம் குற்றங்கள்…. மக்களை பாதுகாக்க காவல்துறை போட்ட பலே திட்டம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் மோசடிகளை நிகழ்த்துவதற்கு தினமும் புதுப்புது யுக்திகளை கையாளுகின்றனர். அதனால் பொதுமக்களிடம் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தற்போது சைபர் கிரைம் குறித்த முத்துவும் முப்பது திருடர்களும் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை சென்னை மாநகர காவல் துறை கடந்த மாதம் வெளியிட்டது. அந்த புத்தகத்தில் ஆன்லைன் மோசடிக்காரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: புயல், 60 கி.மீ வேகத்தில் சூறாவளி…. எச்சரிக்கை எச்சரிக்கை…..!!!!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு உள்ளது. இது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.அதன் பிறகு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்த இன்று புயலாக வலுவடையும் எனவும் இதனால் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இது கட்டாயம்…. கூட்டுறவு துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு விவரத்தை அறிந்து கொள்ளும் விதமாக எஸ்எம்எஸ் எண்களை அனைத்து ரேஷன் கடைகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளுக்கு சேமிப்பு கிடங்குகளில் இருந்து அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதை தாண்டி அரசு சார்பாகவும் பள்ளி நிர்வாகம் சார்பாகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு போதனை வகுப்புகள் நடத்தப்படுவது, நீதி கதைகள், அறநெறி முறைகள் மற்றும் அகிம்சை போன்றவற்றை கற்பிப்பது என மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு நல்ல சமுதாய அக்கறை கொண்டவராக உருவாக்க இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு இருக்கையில் நேற்று நெல்லை மாவட்டம் களக்காட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

கல்விப் பணிகளில் காலியிடங்கள்…. டிசம்பர் 10 கடைசி நாள்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்வி பணிகளில் நிதியாளர் காலி பணியிட தேர்வுக்கு டிசம்பர் 10ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் நிதியாளர் காலி பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி தேர்வு நடைபெறும். […]

Categories
மாநில செய்திகள்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொது அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சுய விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று இணைய வழியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சில நிர்வாக காரணங்களால் கலந்தாய்வு தற்போது டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் முதலில் மாவட்டத்திற்குள்ளும் அதன் பிறகு மாவட்டம் விட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் அடுத்த கல்வியாண்டில் உயர் கல்விக்கு செல்லும் போது எந்தெந்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய விரும்புகின்றனர் என்பதை அறிந்து கொள்ளவும் அதற்கு தயார் படுத்தும் விதமாகவும் பல நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி மாணவர்களின் விருப்ப பாடப்பிரிவுகள் எவை என்பதை அறியும் வகையில் அவர்களிடம் எழுத்து வடிவில் கருத்து கேட்கப்படும். பிறகு அந்த பாடப்பிரிவு தொடர்பான திறன்களை வளர்க்க தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இதற்காக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்களின் […]

Categories
மாநில செய்திகள்

இன்று உருவாகிறது புயல்…. புரட்டி எடுக்க போகும் மழை…. 55 கி.மீ வேகத்தில்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு உள்ளது. இது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.அதன் பிறகு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்த இன்று புயலாக வலுவடையும் எனவும் இதனால் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலைக்கு இன்றும் சிறப்பு பேருந்துகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டிசம்பர் 7ஆம் தேதி வரை 2700 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. சென்னையிலும் கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. நேற்று திருவண்ணாமலை கார்த்திகை தீப […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் வந்தது ரெட், ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பு உதவி தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் பட்டதாரி யாரும் இருக்கக் கூடாது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த 6 ஆம்  வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோ வெளியேற்றம்… காங்கிரஸ் பந்தாட்டம்… சைலண்ட் மோடில் கம்யூனிஸ்ட்கள்… வச்சு செய்த DMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி,  சட்டமன்றத்திலும் சரி,  அதேபோல எங்கு பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் புராணம் தான் பாடுகிறார்கள். மூத்த  அமைச்சர்கள்,  கூட்டணி கட்சிகள் அனைத்தும் உதயநிதிக்காக பேசுகின்றன. வைகோ அவர்கள் தலைவராக உருவாகி விடுவார்கள் என்று  வெளியே அனுப்பினார்கள், எம்.ஜி.ஆரை வெளியே அனுப்பி வைத்தார்கள். கம்யூனிஸ்ட்கள் யாரும் பேசுவதில்லை. காங்கிரஸ் கட்சியையே திமுக ஸ்டாலின் பந்தாடிக் கொண்டிருக்கிறார். பசுமை வழிச் சாலைக்கு எதிராக அதிமுக ஆட்சியில் என்னென்ன போராட்டங்கள் நடக்கிறதோ அவை அனைத்தும் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை …!!

வரக்கூடிய  8, 9, 10 ஆகிய தேதிகளில் சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு இருக்கிறது.  சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் சென்னையில் பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்,  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

55KM வேகத்துல காற்று வீசும்…! 10ஆம் தேதிவரை போகாதீங்க… வானிலை முக்கிய அலர்ட்…!!

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காய்ச்சலுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. மேலும் இதில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து,  இன்று மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 7ஆம் தேதி  மாலை,  இது புயலாக வலுவடைய […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING NEWS: புயல் எதிரொலி – 9ஆம் தேதி ரெட் அலர்ட் …!!

வங்க கடலில் புயல் உருவாகும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமை 9ஆம் தேதி அதி கன மழைக்கான ”ரெட் அலெர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 9ஆம் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஓரிரு இடங்களில்  கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருப்பதாகவும்,  இன்று மாலை மேலும் வலுபெற்று காய்ச்சலுத்த தாழ்வு மண்டலமாக மாறும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் கையில் தான் முடிவு…. கரெக்ட்டா சொன்ன எடப்பாடி…! நச்சுன்னு விளக்கிய எஸ்.பி வேலுமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது குறித்து எடப்பாடியார் ஏற்கனவே தெளிவாக பதில் சொன்னார். சட்டமன்றம் முடித்து வரும்போது என்று நினைக்கின்றேன்…. இதற்கு எந்த தீர்மானமும் வேண்டியதில்லை. எடப்பாடியார் கூறிய பதிலையே நானும் மீண்டும் திரும்ப கூறுகிறேன். மு.க ஸ்டாலின் நினைத்தால் உடனே துணை முதலமைச்சர் ஆக்கலாம்.  வாய்ப்பு அவரிடமே இருக்கிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்து சொல்லி, ஸ்டாலின் செய்வது போல் ஒரு பாவனை காட்டுகிறார்கள். திமுக கட்சி பேரறிஞர் அண்ணா […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: தமிழகத்தில் டிச.8, 9-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு…!!

வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலை வெளியிட்டு இருக்கிறது. மிக மிக பலத்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு – தமிழகத்துக்கு எச்சரிக்கை…!!

வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலை வெளியிட்டு இருக்கிறது. மிக மிக பலத்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்துக்கு ரெட் அலர்ட் …!!

நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மிக மிக பலத்த மழை எச்சரிக்கையையடுத்து வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. மிக மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதிகபட்சம் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வங்க […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஷாக்…! இப்படி படிச்சு இருந்தா….. டீச்சர் ”தகுதியில்லை” – ஆப்பு வைத்த ஐகோர்ட் அதிரடி ..!!

சென்னை உயர்நீதிமன்றதில் நடந்த வழக்கில் நீதிபதி கூறிய கருத்து ஆசிரியர்களுக்குள் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆங்கில பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தமிழ் பாடப்பிரிவில் பிஎட் படிப்பை முடித்த பிறகு தொலைதூரக் […]

Categories
மாநில செய்திகள்

தொலைதூர கல்வியில் படித்த ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை: ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு ..!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆங்கில பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தமிழ் பாடப்பிரிவில் பிஎட் படிப்பை முடித்த பிறகு தொலைதூரக் கல்விமுறையின் கீழ் மனுதாரர் பி.ஏ ஆங்கிலம் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 3A தேர்வர்கள் கவனத்திற்கு…. இங்கு தேர்வு நடைபெறாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி யின் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 3A தேர்வு வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சில நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு தமிழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தொலைதூர கல்வி – ‘ ஆசிரியராக தகுதியில்லை’ – ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

தொலைதூரக் கல்வி முறையில் படித்தவர்கள் ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. தற்போது ஆசிரியர்களாக உள்ள பலர் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று படிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டு காட்டியுள்ளனர். கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று பயின்றவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தி இருக்கிறது உயர்நீதிமன்றம். கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் நியமன நடைமுறையை மூன்று மாதங்களில் […]

Categories
மாநில செய்திகள்

புயல் எச்சரிக்கை: தமிழக மாவட்டங்களுக்கு அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!!

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி C.M… 10 வருஷ பட்டியல்…. பத்த வச்ச மாஜி… மீடியா முன்பு நழுவும் ஸ்டாலின் ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பத்து வருடமாக அதிமுக ஆட்சியில் எடப்பாடி யார் முதலமைச்சராக இருந்தபோது அத்திக்கடவு அவிநாசி திட்டம், அனைத்து சாலைகளையும் விரிவுபடுத்தினோம்.  6 புதிய கல்லூரிகள் கொண்டு வந்தோம். புதிய தாலுக்கா அமைத்தோம், தாலுகா அலுவலகம் அமைத்தோம். கலெக்டர் ஆபீஸ் கட்டிக் கொடுத்தோம். எஸ்.பி ஆபீஸ் கட்டிக்கொடுத்தோம், அனைத்து யுனிவர்சிட்டி யும் கட்டிக்கொடுத்தோம், பேரூராட்சி கட்டி கொடுத்தோம். அரசு மருத்துவமனையை மேம்படுத்திய பிறகு,   தனியார் மருத்துவமனைக்கும் மேலாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது.. முதல்வர் MK Stalin ஆவேசம்..!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில், இன்று இருப்பதைவிட மிக மெலிந்த உருவமாக இருந்தவன் நான். அடியை தாங்கும் உடம்பு மட்டுமல்ல, அடி என்றால் எப்படி இருக்கும் என்று அறியாத  நிலையில் இருந்தவன் நான். அப்பொழுது என் மேல் விழுந்த அடியை தாங்கி,  அதன்பிறகு மன தைரியத்தை கொடுத்தவர்தான் நம்முடைய மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள். தன் உயிரையும் காத்து, என் உயிரையும் காத்த கருப்பு சட்டைக்காரர் என்னுடைய ஆசிரியர் அவர்கள். திக்கற்ற நிலையில் இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பார்த்து பார்த்து செஞ்ச ADMK…! ஒட்டுமொத்தமாக பந்தாடிய DMK… பட்டியல் போட்ட கொங்கு மண்டலம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவை மாவட்டத்திலேயே ஒன்றரை ஆண்டு காலமாக எந்த பணியும் செய்யவில்லை. ஆகவே இந்த சாலை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 3 முறை சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் சேர்ந்து கமிஷனரிடம் மனு கொடுத்தார்கள். நாங்கள் மூன்று பேர் மனு கலெக்டரிடம் கொடுத்தோம். ஒரு மீட்டிங் போட்டாரு. அதில் போய் கலந்து கொண்டோம்…  நான்கு மணி நேரம் பேசினோம். 10 நாட்கள் கால அவகாசம் கொடுக்கின்றோம். அதற்குள் இந்த […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே தமிழ்நாடு “நம்பர்-1”…. அட இது தெரியாம போச்சே…!!!!

இந்தியாவில் பொருளாதார ரீதியாக வளர்ந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்டு மிக அதிகமான தொழில்துறை மயமான மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு – 38,837, குஜராத் 28,479, மகாராஷ்டிரா -25,610, தெலங்கானா -15,271, ஆந்திரா – 16,924, உ.பி. – 16,184 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை….. 6 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை…..!!!!!

தென் கிழக்கு வங்க கடலில் நேற்று புதிதாககாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் பின்னர் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் எட்டாம் தேதி காலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் கரையை வந்தடையும். இதனால் டிசம்பர் எட்டாம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை…. இன்று ஒரு நாள் தான் டைம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலைமூன்றாம் ஆண்டு படிப்புகளில் பயிலும் சீர் மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ரெடியா இருங்க?…. வெளியான சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகைக்கு பதிலாக ஆயிரம் ரூபாயை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்க உள்ளதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த தொகையை வங்கிக் கணக்கு அல்லது ரேஷன் கடைகள் மூலமாக வழங்கலாம் என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆதார் அடையாள எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் பணத்தை நேரடியாக தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

வில்லங்க சான்று காலவரம்பு…. பத்திரப்பதிவுத்துறையில் புதிய அதிரடி மாற்றம்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும்போது அதற்கு முன்பு ஆவணங்களை சரிபார்க்க எத்தனை வருடங்களுக்கான வில்லங்க விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் நிலவியது. தற்போது சொத்து விற்பனை பதிவில் மோசடி மற்றும் ஆள் மாறாட்டத்தை தடுக்கும் விதமாக பதிவுத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பதிவுக்கு வரும் சொத்தின் முன் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தாய் பத்திரத்தின் அசல் பிரதியை சார் பதிவாளர்கள் சரி பார்ப்பதுடன் அதன் குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக இயற்கை எரிவாயுவால் இயங்கும் பேருந்து…. காற்று மாசுவே ஏற்படாது…..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவால் இயங்கும் பேருந்து ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோகுல்நாத் என்ற 33 வயது மிக்க நபர் பேருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு என்ற சிஎன்ஜியை எரிபொருளாக வைத்து இயங்கும் பேருந்தை திருப்பூர் -புளியம்பட்டி வழித்தடத்தில் அறிமுகம் செய்துள்ளார். டீசல் விலை தற்போது அதிகமாக உள்ளதால், பயணிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் லாபம் அதிகமாக கிடைக்கவில்லை. அதனால் தமிழகத்தில் முதல் முறையாக சிஎன்ஜி […]

Categories
மாநில செய்திகள்

கிராமிய கலைஞர்களே ரெடியா?…. சென்னையில் ” நம்ம ஊரு திருவிழா”…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான கலை விழா சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முதல் கட்டமாக சென்னையில் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள கலை குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து நிமிட காட்சியை பதிவு செய்து கலை பண்பாட்டு, முகவரி மற்றும் செல்போனியன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் மருந்தகங்களில் இனி இது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழக முழுவதும் மருந்து கடைகளில் பணியாற்றும் மருந்தாளர்களும் வெண்ணிற அங்கி மற்றும் அடையாள அட்டை அணிய வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் 40 ஆயிரம் சில்லரை மருந்து கடைகள், மருந்தகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்த மறுத்தகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மருந்தகங்களில் பணியாற்றும் மருந்தாளர்களுக்காக வெண்ணிற அங்கி மற்றும் அடையாள அட்டை உள்ளது. மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள் மற்றும் மருந்தகங்களில் பணியாற்றும் மருந்தாளர்களும் பெரும்பாலானோர் தங்களுக்கான ஆடையை அணிந்து பணியாற்றுவதில்லை. […]

Categories

Tech |