வணிகம் புரிதலை எளிதாக்குவதற்கான தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளது. மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு துறை வணிகம் புரிதலை எளிதாக்குதல் தொடர்பாக ஆண்டுதோறும் மாநிலங்களை தரவரிசை படுத்துகிறது. இந்த தரவரிசை பட்டியல் வணிக சூழலை உருவாக்குபவர்கள், சாதனை படைப்பதற்கு முயற்சி செய்பவர்கள், சாதனையாளர்கள் மற்றும் சிறந்த சாதனையாளர்கள் என்ற 4 பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இதில் 90% அதிகமான மதிப்பெண்களை எடுக்கும் மாநிலங்கள் சிறந்த தரவரிசை பட்டியலில் இடம்பெறும். […]
