தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக்குவதற்கு மக்களே முடிவு செய்துவிட்டார்கள் என்று கனிமொழி கூறியுள்ளார். தர்மபுரியில் தி.மு.க சார்பில் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ தலைமையில் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க சார்பில் பிரச்சாரம் செய்ய மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியது, விவசாயிகள் எதிர்க்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வேளாண் துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆதரித்துள்ளனர். எடப்பாடி […]
