கனடா யோகா மினிஸ்டரியின் நடுவராக தமிழகத்தை சேர்ந்த யோகா கிராண்ட் மாஸ்டர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவில் YMC (யோகா மினிஸ்ட்ரி ஆஃப் கனடா) என்ற அமைப்பின் சார்பில் யோகா கல்வி யோகா வணிகம் ,யோகா சாதனைகளுக்கான அங்கீகாரம் மற்றும் யோகா ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குவது போன்றவற்றிற்கான ஏற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கனடாவின் சமூகத்தில் YMC அமைப்பு, ஐஎன்சி யின் கீழ் யோகாவின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்காக நிறுவப்பட்டுள்ளது. சி.ஆர்.ஏ கனடா என்ற நிறுவனத்தின் நிறுவன பதிவுக்கான ஒப்புதல் பெற்று இயங்கி வருகிறது. […]
