நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை மண்டல அதிகாரிகள் வாக்குபதிவு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதியிலிருக்கும் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் வாக்கினை போட்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதனையடுத்து வாக்கு பதிவு நேரம் முடிந்தவுடன் தேர்தல் பணியாளர்கள் வாக்கு போடுவதற்காக பயன்படுத்தப்பட்ட […]
