தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானாவை தொடர்ந்து தமிழகத்திலும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு வந்த 47 வயதுடைய ஒரு நபருக்கு ஒமைக்ரான் தொற்று […]
