நெல்லை மாவட்டம் ராதாபுரம் மதகனேரி பகுதியில் வசித்து வருபவர் டேவிட் (46). இவர் மீது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, நெல்லை நீதிமன்றத்தில் சென்ற 2018 ஆம் வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து டேவிட் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்துவந்தார். இந்நிலையில் சிறையிலிருந்தபோது டேவிட் எந்த தவறும் செய்யாமல் சிறை விதிகளை கடைபிடித்து நடந்ததால், அவரை நன்னடத்தை கைதி என […]
