கார் கட்டுபாட்டை இழந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதிஷ்டவசமாக 7 மாணவர்கள் உயிர் தப்பியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்(21), அபிஷேக்(19), கோகுல்(19), தென்னரசு(19) உள்பட 7 கல்லூரி மாணவர்கள் காரில் சுற்றுலாவிற்கு ஊட்டிக்கு சென்றனர். இதனையடுத்து ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு முதுமலைக்கு செல்ல கல்லட்டி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 23-வது வளைவில் சென்றபோது திடீரென கார் கட்டுபாட்டை இழந்து சாலை தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் உருண்டு மரத்தில் மோதி நின்றது. அதிஷ்டவசமாக விபத்தில் மாணவர்கள் […]
