சாலையோரம் இருந்த பழமையான மரம் வேரோடு சரிந்து விழுந்ததில் 2 வீடுகள் மற்றும் மின் கம்பம் சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் கம்பம்-சுருளிப்பட்டி செல்லும் சாலையோரம் ஏராளமான மரங்கள் உள்ள நிலையில் சுருளிப்பட்டி பிரிவு சாலையில் உள்ள வ.உ.சி திடல் அருகே மிகவும் பழமையான வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்து அருகே இருந்த வீட்டின் மீது விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் சிக்கிய மீனம்மாள் […]
