ராமநாதபுரத்தில் அனுமதியின்றி மணலை கடத்திவந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய டிரைவரையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் மூக்கையூர் ஆற்றுப்படுகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிர்ந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் மணல் அள்ளிவந்த டிராக்டரை நிறுத்தியுள்ளனர். மேலும் போலீசாரை கண்டதும் டிராக்டரை […]
