கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கம்பம் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கம்பம் ஏகலூத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் […]
