மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட நிற்பவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து அழுகிய நெற்பயிர்கள் உடன் தப்படித்தும் ,ஒப்பாரிவைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் காவிரி தனபாலன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். நாகை, கீழ்வேளூர், திருமருகல், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.புயல் மற்றும் […]
