தமிழ், இந்தி,தெலுங்கு என புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் உடன் பணியாற்றிய பிரபல தபேலா கலைஞர் பிரசாந்த்(80) சென்னையில் இன்று காலமானார். சின்னத்தம்பியின் போவோமா ஊர்கோலம், கரகாட்டக்காரனில் மதுரை மரிக்கொழுந்து, வராக நதிக்கரை ஓரம், ராகங்கள் பதினாறு உருவான வரலாறு, பூவே செம்பூவே, முத்துமணி மாலை உள்ளிட்ட 6 ஆயிரம் பாடல்களுக்கு மேல் தபேலா வாசித்துள்ளார். 90 களில் வெளியான இளையராஜா பாடல்களை பிரசாந்தின் கைவண்ணம் தனியாக தெரியும்.
