நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். நோய்கள் தீர மருத்துவமனை, கோயில் என அலைந்து திரிந்த பலரும் தன்வந்திரி பகவானை வணங்கினால் நோயிலிருந்து விடுபடலாம். தமிழகத்தில், தன்வந்திரி பகவானுக்கென்று கோயில்கள் அவ்வளவாக இல்லை. தன்வந்திரி பகவானை வீட்டிலிருந்தே வழிபடலாம். நோயாளிகள்தான் வழிபடவேண்டும் என்றில்லை. பொதுவாகவே, திரயோதசி எனப்படும் பிரதோஷ நாள், தன்வந்திரி பகவானுக்கு உகந்த நாள். குறிப்பாக, தேய்பிறை திரயோதசி,அதாவது அமாவாசைக்கு முன்னதாக வருகிற திரயோதசி ரொம்பவே விசேஷம். தவிர, எந்த நாளிலும் தன்வந்திரியை வணங்கலாம். பூஜிக்கலாம். […]
