தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் தன்னார்வலர்கள் பலரும் இணைந்து சேவை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட விரும்புவோர் ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில ஒருங்கிணைப்பு குழுவுடன் இணைந்து தன்னார்வு பணியில் ஈடுபட விரும்புவோர் இதில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், […]
