கொரோனா ஊரடங்கில் வேலையை இழந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் தலைமை சமையல்காரர் மன உறுதியை கைவிடாமல் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வெற்றி பெற்றுள்ளார். மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்தவர் அக் ஷய் பார்க்கர். அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தலைமை சமையலராக பணியாற்றி வந்துள்ளார். மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இவர் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் வேலையை இழந்து தவித்து வந்தார். பின்னர் சாதாரண ஹோட்டல் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை வேலைக்கு விண்ணப்பித்தார். […]
