Categories
சினிமா

ஐஸ்வர்யா தனுஷ் பிரிவுக்கு இது தான் முக்கிய காரணம்…! ரகசியத்தை வெளியிட்ட பிரபலம்….!!!

ரஜினியின் பேச்சைக் கேட்காமல் தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டி வருவது தான் விவாகரத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவிற்கு முன்னர் ரஜினி அவர்களுடைய பிள்ளைகளான யாத்ரா மற்றும் லிங்கா உடன் அதிக நேரத்தை செலவிட விரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் போயஸ் கார்டனில் தனது வீட்டிற்கு அருகிலேயே வீடு கட்டுமாறு தனுஷிடம் கூறியுள்ளார் ரஜினி . இதனைத் தொடர்ந்து தனுஷ் அந்தப்பகுதியில் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்ட தொடங்கியுள்ளார். அந்த […]

Categories
சினிமா

“பலமுறை பேசியும் பயனில்லை….!”விவாகரத்து முடிவில் பிடிவாதமாக இருந்த தனுஷ்”….!!!!

தனுஷிடம் விவாகரத்து செய்ய வேண்டாம் என ரஜினிகாந்த் பலமுறை கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக தங்கள் வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் […]

Categories
சினிமா

ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து….! இனி இவங்க பாடுதான் திண்டாட்டம்….!!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவு குறித்து ரசிகர்கள் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கூறியுள்ளனர். இவர்களின் விவாகரத்தால் பெரிதும் பாதிக்கப்பட போவது இவர்களின் குழந்தைகளான யாத்ரா மற்றும் லிங்கா தான். இதுகுறித்து ரசிகர்கள் பலர் குழந்தைகளுக்காக  சேர்ந்து வாழ வேண்டும், விவாகரத்து முடிவை கைவிடுங்கள் என […]

Categories
சினிமா

“வாய்ப்பில்ல ராஜா…. இனி உன் ஆசை நிறைவேறாது..!” தனுஷ் மீது கொந்தளித்த ரசிகர்கள்…!!

தனுஷின் விவாகரத்துக்கு முடிவு குறித்து ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்தால் ரஜினியின் ரசிகர்கள் பலர் கடும் கோபத்தில் உள்ளனர். சிலர் ஒரு படி மேலே போய் ரஜினி ரசிகர்கள் தனுஷை அண் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷுக்கு ரஜினிகாந்த்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக பலமுறை தெரிவித்துள்ளார் .ரஜினியின் காலா படத்தை நடிகர் தனுஷ்தான் தயாரித்திருந்தார். ஆனால் அந்த படத்தில் கூட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடக்கடவுளே!”…. கடும் மோதலில் ரஜினி & தனுஷ் ரசிகர்கள்…. அலறும் டுவிட்டர்….!!!!

கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் இணையத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தனுஷின் மீது ரஜினி ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதனால் தனுஷ் ரசிகர்கள் இடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது ரஜினி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து பதிவிடுவதாக நினைத்து தனுஷை விமர்சனம் செய்து வருகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ளாத தனுஷ் ரசிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

புஷ்பா இயக்குனரின் அடுத்த படம்…. இணையும் முன்னணி தமிழ் நடிகர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர் புஷ்பா பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இதைத்தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்களை விட்டுடுங்க!”…. தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து… லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்…!!!

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து கொண்ட சம்பவம் அவர்களது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரஜினி ரசிகர்களும் தங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யாவின்  இந்த முடிவை அறிந்த ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் “அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா. ரெண்டு […]

Categories
சினிமா

“அப்போ அண்ணன் இப்போ தம்பி…!!” தனுஷ் விவாகரத்து குறித்து நெட்டிசன்கள் கருத்து….!!

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தது குறித்து தொடர்ந்து பல விவாதங்கள் இணையதள வாசிகளால் கூறப்பட்டு வருகின்றன. நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்ட தன்னுடைய மனைவியான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துள்ளார். இதுகுறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. மேலும் தனுஷின் குடும்பத்திற்கு விவாகரத்து என்பது ஒரு புதிய விஷயம் அல்ல ஏற்கனவே தனுஷின் அண்ணன் செல்வராகவன் தன்னுடைய காதல் மனைவியான சோனியா அகர்வால் விவாகரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் செல்வராகவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாறன்” OTTயில் ரிலீசா….? வெளியான தகவல்…. அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்….!!

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடித்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து கார்த்திக் நரேனின் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் மாறன். இதில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்-ல் மாறன் திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“தெறிக்க விடலாமா?”…. ‘மாறன்’ ஓபனிங்கே வேற லெவல்…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!

மாளவிகா மோகனன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் நடிப்பில் தயாராகி வரும் ‘மாறன்’ திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் “மாறன்” திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனுஷ் ஓபனிங் பாடலை பாடியுள்ளதாகவும், அவருடன் இணைந்து தெருக்குரல் அறிவு ராப் பாடியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் விவேக் இந்த பாடலை எழுதியுள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் இந்த படமும் OTT யில் ரிலீசா…..!! ரசிகர்கள் அப்செட்….. எந்த படம்னு தெரியுமா…..?

‘மாறன்’ திரைப்படம் நேரடியாக OTT யில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இதனைத்தொடர்ந்து இவர்  அடுத்தடுத்த புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மாறன்”. இந்நிலையில், இந்த திரைப்படம் நேரடியாக OTT யில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இவரின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். ஏனெனில் இவரை திரையில் காண வேண்டுமென ஆவலாக இருந்த ரசிகர்கள் OTT […]

Categories
சினிமா

“வாத்தி” யாக களமிறங்கும் தனுஷ்…..தொடங்கியது படப்பிடிப்பு ….!!

நடிகர் தனுஷ் தெலுங்கு பட உலகில் தனது பயணத்தை தொடங்கி உள்ளார். தனுஷின் இரண்டாவது pan-india படமான வாத்தி படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது இதில் நடிகை சம்யுக்தா மேனன் மற்றும் இயக்குனர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்படுகிறது. தெலுங்கில் இந்த படத்திற்கு சார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷ் தெலுங்கு பட உலகிலும் கால் பதிக்க உள்ளார் என்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…… கலக்கலாக தொடங்கிய தனுஷின் புதிய படம்…… ட்ரெண்டாகும் புகைப்படம்…..!!!

‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”மாறன்”. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, இவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ”வாத்தி” என பெயரிடப்பட்ட டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…… அசத்தலாக வெளியான ”மாறன்” ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்…. இணையத்தில் வைரல்….!!!

‘மாறன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் மாறன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் விரைவில் OTT யில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்……. இசையமைப்பாளர் யார் தெரியுமா……?

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும், இவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ”வாத்தி” என பெயரிடப்பட்ட படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.   இதனையடுத்து, இவர் அடுத்ததாக ‘சாணிகாகிதம்’ படத்தின் இயக்குனரான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தனுஷ் ஏற்கனவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டையே மிரளவைத்த தனுஷ் படம்…. OTT-யில் வெளியீடு…. புதிய சாதனை….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவரான தனுஷ் தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை தொடர்ந்து செய்து கொண்டே வருகிறார். ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் படங்களை தொடர்ந்து அக்ஷய் குமாருடன் இணைந்து தனுஷ் நடித்துள்ள படம் அட்ராங்கி ரே. ஆனந்த் எல்.ராய் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஹாட்ஸ்டார் OTT தளத்தில் இந்த படம் வெளியாகியுள்ளது. அட்ராங்கி ரே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனுஷின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்க கேள்விப்பட்டது உண்மைதான்……. உண்மையை உடைத்த நடிகர் தனுஷ்……. என்னன்னு பாருங்க……!!!

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும், இவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ”வாத்தி” என பெயரிடப்பட்ட படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதனையடுத்து, இவர் அடுத்ததாக இயக்குனர் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த தகவலிற்கு ‘ஆம். உங்கள் யூகங்கள் உண்மைதான்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்……. தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் அசத்தலான டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ்……!!!

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் அசத்தலான டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் மாறன், அத்ராங்கி ரே, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தனுஷ் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. தற்போது, இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க! டோலிவுட்டிலும் கலக்கும் தனுஷ்…. முதல் தெலுங்கு படம் SIR….!!!!

தமிழில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தனுஷ் தற்போது கோலிவுட் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அசத்தி வருகிறார். இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தனுஷ், தற்போது டோலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்துக்கு SIR என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கும் இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகிறது. தமிழில் வாத்தி என்ற தலைப்பில் இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தில் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…… தனுஷ் நடிக்கும் புதிய படம்…….. வெளியான அதிரடி அறிவிப்பு…….!!!

தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அசத்தலான தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் மாறன், அத்ராங்கி ரே, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அசத்தலான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OTT யில் மோதும் சிம்பு – தனுஷ் படங்கள்…….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்………!!!

தனுஷ் மற்றும் சிம்புவின் படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் சிம்பு மற்றும் தனுஷ் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். தனுஷ் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும், இவர் நடித்துள்ள பாலிவுட் படமான ”அட்ராங்கி ரே” திரைப்படம் 24ஆம் தேதி ஹாட்ஸ்டார் OTT யில் வெளியாக உள்ளது. இதனையடுத்து, சமீபத்தில் வெளியான சிம்புவின் ”மாநாடு” திரைப்படம் சோனி லைவ் OTT யில் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா?…. பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது இவர்   திருச்சிற்றம்பலம், மாறன், நானே வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் பாலிவுட் படமான ”அட்ராங்கி ரே”  திரைப்படம் வரும் 24ஆம் தேதி OTTயில் வெளியாக உள்ளது. இதனையடுத்து, இவர் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் சாணி காகிதம் படத்தின் இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் ”மாறன்”……. மாஸ் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்…… என்னன்னு பாருங்க….!!.

‘மாறன்’ படத்தின் அப்டேட்  ஒன்றை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”மாறன்”. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் அப்டேட்  ஒன்றை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படத்திற்கான பின்னணி இசையமைக்கும் பணிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காதல்” படத்தை தவறவிட்ட முன்னணி நடிகர்……. நடிச்சிருந்தா செம மாஸ்……!!!

‘காதல்’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”காதல்”. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சந்தியா நடித்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்த படம் ரசிகர்களிடையே இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது நடிகர் தனுஷ் தான் என தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா

ஹாலிவுட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டிய தனுஷ்…. வெளியான படப்பிடிப்பு புகைப்படம்…!!!

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படபிடிப்பு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் தற்போது “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். உலகத்திலேயே அதிக பட்ஜெட் படமாக உருவாகி வரும் இந்த படத்தினை அவெஞ்சர்ஸ் படத்தின் இயக்குனர் ரூஸோ பிரதர்ஸ் இயக்குகின்றனர். நடிகர் தனுஷ் தற்போது தி கிரேட் மேன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். இந்நிலையில் அவர் தன் ஷூட்டிங் ஸ்பாட்டில் […]

Categories
சினிமா

தனுஷ்னா சும்மா இல்ல…! வேற லெவல் கலக்கல்…. அசுரனுக்கு சூப்பர் விருது….!!

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அசுரன் திரைப்படத்திற்கு தனுசுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது, இந்த படத்தில் தனுஷ்க்கு தேசிய விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து மற்றொரு விருதும் தற்போது தனுசுக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவான IFFI இன்றுடன் முடிவடைந்தது. சுமார் ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த திரைப்பட விழாவில் பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OTT யில் வெளியாகும் தனுஷின் அடுத்த படம்….. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…..!!!

‘அட்ராங்கி ரே’ படம் ஹாட்ஸ்டார் OTT யில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் போன்ற திரையுலகிலும் படங்கள் நடித்து வருகிறார். இவர் நடித்த பாலிவுட் திரைப்படம் தான் ”அட்ராங்கி ரே”. இந்த திரைப்படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகான் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் OTT யில் வெளியாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பொல்லாதவன்” படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா….? வைரலாகும் போஸ்டர்….!!!

‘பொல்லாதவன்’ முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் காஜல்அகர்வால் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் ”பொல்லாதவன்”. வெற்றிமாறன் இயக்கிய இந்த படத்தில் தனுஷ், திவ்யா ஸ்பந்தனா, கிஷோர், மற்றும் பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே ஹிட்டான இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் காஜல்அகர்வால் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர் தனுஷுடன் இருக்கும் போஸ்டரும் வெளியாகி வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விடுதலை படத்தின் பாடல்…. தனுஷ் பாடப் போகிறாரா….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

கோலிவுட்டில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்கள் மூலம் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் சூரி மற்றும் விஜய்  சேதுபதியை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைக்கிறார். படத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை ஒரு பிரபலத்தை வைத்து பாட வைக்கலாம் என்று வெற்றிமாறனும், இளையராஜாவும் முடிவு செய்தனர். அதன்படி இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறனின் ”விடுதலை” படத்தில் தனுஷா….? வெளியான புதிய தகவல்….!!!

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் தனுஷ் பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது  ”விடுதலை” என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து தயாராகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”இது தலைவர் திருவிழா”…. அண்ணாத்த ட்ரைலரை புகழ்ந்த தனுஷ்…. ட்விட்டர் பக்கத்தில் பதிவு…!!

அண்ணாத்த படத்தின் ட்ரைலரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் தற்போது ”அண்ணாத்த” படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லர்  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. விருதுடன் போஸ் கொடுத்த ரஜினி மற்றும் தனுஷ்…. வெளியான அழகிய புகைப்படம்….!!!

விருதுகளை பெற்ற பின் ரஜினி மற்றும் தனுஷ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு டெல்லியில் இன்று தேசிய விருதினை அளித்தனர். இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார். இதில் நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை ‘அசுரன்’ படத்திற்காக பெற்றார். மேலும், இந்த விழாவில் ரஜினி, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், லதா ரஜினிகாந்த் என அனைவரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளம் இயக்குநரின் 3 வருட உழைப்பு…. கைவிட்ட தனுஷ்…. வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன்….!!

இயக்குனர் ராம்குமாருக்கு சிவகார்த்திகேயன் வாய்ப்பு கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். இவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது தனுஷாக இருந்தாலும் தற்போது இவருடைய வளர்ச்சி அனைத்து நடிகர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக உள்ளது. முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை இயக்கிய ராம்குமார், தனுஷ்க்கு கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலாக கதை எழுதி வருகிறார். ஆனால், இவர் இன்னும் கதையை முடிக்காத காரணத்தினால் இப்போதைக்கு ராம்குமாரின் படத்தை தனுஷ் ஒதுக்கி வைத்துவிட்டார். இந்நிலையில், சிவகார்த்திகேயன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் – செல்வராகவன் படத்தின் புதிய அப்டேட்…. ரசிகர்கள் உற்சாகம்….!!

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.  இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இயக்குனர் செல்வராகவன் மற்றும்  தனுஷ் இருவரின் கூட்டணியில் “நானே வருவேன்” படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இது தனுஷ் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவன்-தனுஷ் கூட்டணி…. படத்தின் பெயரில் மாற்றமா….? வெளியான தகவல்….!!

செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.  இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இயக்குனர் செல்வராகவன் மற்றும்  தனுஷ் இருவரின் கூட்டணியில் “நானே வருவேன்” படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இது தனுஷ் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

வாள் தூக்கி நின்னான் பாரு… ‘கர்ணன்’ படத்தை கவுரவப்படுத்திய அமெரிக்காவின் பிரபல இதழ்!!

தனுஷ் நடித்த கர்ணன் படத்தை கவுரவப்படுத்தியுள்ளது அமெரிக்காவின் பிரபல இதழ். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம்தான் கர்ணன்.மேலும் நட்டி நட்ராஜ், லால், ரஜிஷா விஜயன், யோகிபாபு உட்பட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.. இந்த படம் தியேட்டர்களில் வெளியாகி பெரும் வசூலையும், நல்ல வரவேற்பையும் பெற்றது. கொடியங்குளம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இந்தப் படத்தை பார்த்த தமிழக அரசியல்வாதிகள், பிற நடிகர்கள் உட்பட பலரும் பாராட்டினர்.. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகரா… வெளியான புதிய தகவல்…!!!

காதல் திரைப்படத்தில் முதலில் யார் நடிக்க இருந்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பிரபல இயக்குனர் சங்கர் தயாரித்திருந்த இப்படத்தில் பரத் மற்றும் சந்தியா நடித்திருந்தனர். இந்நிலையில் காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது தனுஷ் தான் என்று தெரியவந்துள்ளது. அவர் இப்படத்தின் வாய்ப்பை நழுவ விடவே அதற்கு அடுத்தபடியாக பரத் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சினிமாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன்2’ உருவாகிறதா… தயாரிப்பாளரே சொல்லிட்டாரு… வெளியான சூப்பர் தகவல்…!!!

கர்ணன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த முதல் படமே அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. இதைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மாபெரும் ஹிட்டாக மாரிசெல்வராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார். குறிப்பாக கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், […]

Categories
மாநில செய்திகள்

தனுஷ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி… “ரூ.10 லட்சம்” நிதி வழங்கிய உதயநிதி!!

உயிரிழந்த மாணவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தனுஷ்(19) என்ற மாணவன் நேற்று இரவு நீட் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தான்.. மகன் படிப்பதை கண்ட பெற்றோர் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து தனது மகனை பார்க்க சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தனுஷ் வீட்டில் உள்ள முற்றத்தில் நீட் தேர்வின் அச்சம் […]

Categories
மாநில செய்திகள்

தனுஷ் தற்கொலை செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே  19 வயது தனுஷ் என்ற மாணவன்  நேற்று இரவு நீட் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தான். மகன் படிப்பதை கண்ட பெற்றோர் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து தனது மகனை பார்க்க சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தனுஷ் வீட்டில் உள்ள முற்றத்தில் நீட் தேர்வின் அச்சம் காரணமாக தூக்கில் தொங்கிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் மற்றும் சதீஷுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தனுஷ்… வெளியான பழைய புகைப்படம்…!!!

நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் சதீஷுடன் இணைந்து தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவரது தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் தனது வெற்றியை பதித்தவர் மற்றொரு முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன். அதன் பிறகு மீண்டும் தனுஷின் தயாரிப்பில் காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நித்யாமேனனுடன் பிரபல நடிகர்…. திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல் காட்சிகள்…. வலைதளங்களில் வைரலான புகைப்படம்….!!

திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல் காட்சிகள் போது எடுக்கப்பட்ட புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடித்த மாறன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது தான் முடிவடைந்தன. இதனை தொடர்ந்து இவர்  மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ராஷி கண்ணா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர் போன்ற முன்னணி நடிகைகள் கதாநாயகிகளாக தேர்வாகியுள்ளனர். இதற்கிடையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யுவன் சங்கர் ராஜா பர்த்டே பார்ட்டி…. தனுஷ் மற்றும் சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ்….!!!

யுவன் சங்கர் ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நடிகர் சிம்புவும்,தனுஷும் பாட்டு பாடி  அசத்தியுள்ளனர். தமிழ் சினிமாவே கொண்டாடும் இசையமைப்பாளர் என்றால் அது யுவன் சங்கர் ராஜா தான். இவரின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை. இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆகையால் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் சிறப்பு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதில் நடிகர்கள் தனுஷ்,சிம்பு, என்ஜாயி எஞ்ஜாமி பிரபலம் தீ, அறிவு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காதல்’ திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகரா? இயக்குனர் சொன்ன தகவல்…!!!

காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்து இப்படத்தின் இயக்குனர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் முன்னணி நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் இந்தப் படத்தின் நெகட்டிவ் கிளைமாக்ஸை சிலர் நிராகரித்தனர் என இப்படத்தின் இயக்குனர் சக்திவேல் அப்போது கூறியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது காதல் படம் குறித்த மேலும் சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிகாந்த் மருமகன்…. போயஸ்கார்டனில் கட்டும் புதிய வீடு…. வெளியான தகவல்கள்….!!

நடிகர் தனுஷ் தனது மாமனார் வசிக்கும் போயஸ்கார்டனில் புதிதாக வீடு கட்டி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளிலும் நடித்து வருகிறார். அதிலும் தற்பொழுது ஆங்கிலத்தில் ‘தி கிரே மேன்’ மற்றும் இந்தியில் Atrangi Re போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் அண்மையில் தான் நிறைவடைந்துள்ளன. மேலும் இவர் தெலுங்கில் தனது முதல் படத்திற்கான படப்பிடிப்பில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் அடைமொழி…. வெளியான போஸ்டரால் பரபரப்பு….!!!

தனுஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் புதிய போஸ்டரில் குறிப்பிட்டுள்ள அடைமொழி பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் கலக்கி வைக்கிறார்.இதை தொடர்ந்து அவர்தற்போது டோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார். அதன்படி சேகர் கம்முலா இயக்கும் இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தெலுங்கில் உருவாகிவரும் இத்திரைப்படத்தினை தமிழ், ஹிந்தி மொழிகளிலும் வெளியிட உள்ளனர். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. அதில் தனுஷின் புகைப்படத்தோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்டு அன்சீன் புகைப்படம்…. இணையத்தில் வெளியீடு…!!!

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஒன்றாக எடுத்துக் கொண்ட அன்சீன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் மாறன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேற்று அவர் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் 3 படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகையா…. வெளியான புதிய தகவல்….!!!

தனுஷின் 3 படத்தில் முதலில் அமலாபால் தான் நடிக்க இருந்ததாக தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக இப்படங்களில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பாடலும் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றது. மேலும் இத்திரைப்படத்தை தனுஷின் மனைவியும், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் தான் இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ‘கர்ணன்’…. வெளியான கலக்கல் தகவல்….!!!

தனுஷின் கர்ணன் திரைப்படம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. குறிப்பாக இத்திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இதுவரை ஓடிடியில் மட்டுமே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கர்ணன் திரைப்படத்தின் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதன்படி ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கர்ணன் திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்க இருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோலிசோடாவுடன் தனுஷின் அழகிய புகைப்படம்…. குவியும் லைக்குகள்….!!!

‘ஏ கோலி சோடாவே’ எனும் பாடலை நினைவு கூர்ந்துள்ள தனுஷின் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் கூடிய விரைவில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் தனுஷ் கோலிசோடா ஒன்றை பார்த்தபடி எடுத்துள்ள புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் […]

Categories

Tech |