Categories
மாநில செய்திகள்

பலத்த சூறைக்காற்று….. “30 அடிக்கு மேல் கடல் சீற்றம்”….. பீதியில் மக்கள்….!!!!

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பொதுமக்கள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென்று சூறைக் காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன் மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீன் இறங்குதளத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கடலில் காற்றாலை மின் நிலையம்…. 75 ஏக்கர் நிலம்…. எங்கு தெரியுமா?….!!!!

கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆராய ராமநாதபுரத்தில் உள்ள தனுஷ்கோடியில் 350 கோடியில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது என்று தேசிய காற்று சக்தி நிறுவன இயக்குனர் பலராமன் கண்ணன் தெரிவித்துள்ளார். இந்த மையத்திற்காக 75 ஏக்கர் நிலம் கிடைத்துள்ளது. இங்குள்ள கடலில் 8 மெகா வாட் திறனில் இரண்டு காற்றாலைகளை நிறுவி பரிசோதிக்கப்பட உள்ளது. மேலும் குஜராத் மற்றும் தமிழகத்தில் 2030ஆம் ஆண்டுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மர்மமாக நிறுத்திவைக்கப்பட்ட படகு…. குழப்பத்தில் அதிகாரிகள்…. கடற்படை விமானம் தீவிர ரோந்து….!!

தனுஷ்கோடியில் இலங்கை படகு மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து கடலோர காவல்படை விமானம் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே உள்ள 3 வது மணல் திட்டு பகுதியில் இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்று மர்மமான முறையில் நிறுத்தி வைக்கபட்டிருந்துள்ளது. இதனையறிந்த சுங்கத்துறையினர் உடனடியாக அந்த படகை பறிமுதல் செய்து ராமேஸ்வரத்திற்கு கொண்டு வந்தார். இதுகுறித்து கலோர காவல்துறையினர் மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுல யாரு வந்துருப்பா…. தனுஷ்கோடி அருகே நின்ற இலங்கை படகு…. போலீசாருக்கு ஏற்பட்ட குழப்பம்….!!

தனுஷ்கோடி 3-வது மணல்திட்டு பகுதியில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் படகு நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் இருந்து, இலங்கை தலைமன்னாருக்கும் இடையே நடுக்கடலில் 13 மணல் திட்டுகள் உள்ளது. இதில் 5-வது மணல் திட்டுடன் இந்திய கடல் எல்லைப் பகுதி முடிவடைந்து விடுகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி அருகே உள்ள 3-வது மணல்திட்டு பகுதியில் மர்மமான முறையில் படகு ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் சுங்கத்துறை துறையினருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை…. திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பெரும்பாலான சுற்றுலா பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சுற்றுலா பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒரு வாரத்திற்கு பிறகு… அனுமதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள்… மகிழ்ச்சியடைந்த வியாபாரிகள்…!!

ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி, தேவிபட்டினம், மாரியூர், அரியமான் சேதுக்கரை, போன்ற கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா வாகனங்கள் எதுவும் அனுமதிக்கபடாமல் இருந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் விதித்த தடையானது நேற்றுடன் முடிவடைந்துள்ளது. தற்போது தனுஷ்கோடி ராமேஸ்வரம் போன்ற கடற்கரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனுஷ்கோடிக்கு சுற்றுலா செல்ல…. பயணிகளுக்கு இன்று முதல் தடை…!!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதிகளுக்கும், கோவில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா பரவலை […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! கலக்கிட்டாரு மனுஷன்… 50 கிலோ மீட்டர் நீந்திய இலங்கை விமான படை வீரர் ….

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் இலங்கைக்கு நீந்தியவாறு இலங்கை விமானப் படை வீரர் ரோஷன் சாதனை படைத்துள்ளார். இலங்கையின் விமானப்படை வீரரான ரோஷன் அபிஸ் பல நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்ட ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ளார். அதை தொடர்ந்து இலங்கையை சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவரின் 50 வருட கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் வரை  ரோஷன் அபிஸ் தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்தார். தலைமன்னர் ஊர்முனை  கடலில் குதித்து நீந்தியவாறு துவங்கியவாறு இலங்கை கடலோர […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

100க்கும் மேற்ப்பட்ட ஆமை குஞ்சுகள் தனுஷ்கோடி கடலில் விடப்பட்டது ..!!

தனுஷ்கோடியில் வனத்துறை மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. தனுஷ்கோடி சுற்றுவட்டார பகுதிகளான எம்.ஆர் சத்திரம், கம்பிப்பாடு உள்ளிட்ட இடங்களில் ஆமைகள் இட்டு சென்ற 9327 முட்டைகள் வனத்துறை மூலம் சேகரிக்கப்பட்டு, எம்ஆர் சத்திரம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கடல் ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டன. 52 நாட்களுக்கு பிறகு முட்டையிலிருந்து வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் மற்றும் மன்னார் வளைகுடா கடல்வாழ் […]

Categories
மாநில செய்திகள்

தனுஷ்கோடி அழிந்து…. இன்றுடன் 56 ஆண்டுகள் நிறைவு…. நீங்கா துயர சம்பவம்…!!

தனுஷ்கோடி நகரம் அழிந்து போன நீங்கா துயர சம்பவம் நடந்து இன்றுடன் 56 வருடங்கள் நிறைவடைந்தது.  ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இந்த நகரம் ராமேஸ்வரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இலங்கையுடன் கடல் வாணிபம் செய்வதற்கு தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கி வருகிறது. இந்திய பெருங்கடலும் , வங்க கடலும் சேரும் இடம் தனுஷ்கோடி கடல் ஆகும். இங்கு குளித்தால் காசியாத்திரை முடிவது என்பது ஐதிகம். தனுஷ் என்றால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் – அனுமதி மறுப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதிகளில் ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக தனுஷ்கோடி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று அதிகமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தந்ததால் போலீஸ் சோதனை சாவடியில்  தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை அழகை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு மாவட்டங்களில் […]

Categories

Tech |