மெக்சிகோவில் சரக்கு லாரியும் தனியார் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ நாட்டில் தெற்கே குர்ரிரோ கோஸ்டா கிராண்ட் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அகாபல்கோ-ஜிகுவாதனிஜோ என்ற நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றை தனியார் வாகன ஓட்டுனர் ஒருவர் முந்தி செல்ல முயன்றுள்ளார். இருப்பினும் சரக்கு வாகனத்தின் பின்புறம் இவரது கார் மோதியுள்ளது. அப்பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த இவரது வாகனம் சாலையில் எதிர்பக்கம் உள்ள பகுதிக்கு […]
