முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயிகள் நலனில் அக்கறை காட்டவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளது. அதற்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக முதலமைச்சரின் சீரிய முயற்சியினால் தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான உரம் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி யூரியா -90,947மெ.டன்,டி.ஏ.பி-55,628மெ.டன்,பொட்டாஷ்-33,867மெ.டன்,காம்ப்ளக்ஸ்-1,61,626மெ.டன் என்ற அளவில் இருப்பு இருக்கிறது. விவசாயிகளின் நலன் கருதி உரத்தட்டுப்பாட்டினை […]
