தனியார் மருத்துவமனையில் பணம் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லநாடு பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பெருமாள் ரத வீதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியன் வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார். அதன்பின் அவர் மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் தனது சட்டையை கழட்டி அதில் ரூ.2 ஆயிரத்தை வைத்துள்ளார். அதன்பின் சுப்பிரமணியன் சீருடையை அணிந்து கொண்டு பணியில் […]
