ஈரோடு சிறுமியின் சினைமுட்டை விற்பனை விவகாரத்தில் 6 தனியார் மருத்துவமனைகளுக்கு தொடர்பு இருப்பதாக அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார். 16 வயது சிறுமியிடம் சினைமுட்டை எடுப்பதற்காக போலியாக கணவரை உருவாக்கி, குடும்பத்தினரே எடுத்து விற்றுள்ளனர். ஒரு குழந்தையை பெற்ற பிறகே சினைமுட்டை தானம் தரமுடியும், இதில் எந்தவித விதிகளும் கடைபிடிக்கப்படவில்லை எனக்கூறிய அவர், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஒருமுறைதான் கருமுட்டை தானம் தர வேண்டும் என்று விதி மீறப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 2 […]
