ஊட்டி மேட்டுப்பாளையம் மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்க பட்டதாக வெளியான தகவலுக்கு தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணிப்பார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக இந்த சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இந்த சேவை தொடங்கியுள்ளதாகவும், இருப்பினும் இது தனியார் மயமாக்கப்பட்டு விட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேட்டுப்பாளையம் உதகை இடையே கடந்த ஐந்தாம் […]
