மொபட் மீது மோதி தனியார் பேருந்து கால்வாயில் பாய்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி பகுதியில் இருந்து பயணிகளுடன் தனியார் பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சரவணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ரவி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் கோடியூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் திருப்பதி என்பவர் மொபட்டை தள்ளி சென்றார். திடீரென அவர் பேருந்துக்கு குறுக்கே வந்ததால் சரவணன் […]
