விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காத தனியார் பேருந்து ஜப்தி செய்யபட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வெடால் கிராமத்தை சேர்ந்தவர் 52 வயதான மனோகர். இவர் வெடாலிலிருந்து செஞ்சிக்கு வந்த தனியார் பேருந்தில் கடந்த 2013 ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ம் தேதி அன்று பயணம் செய்துள்ளார். அப்போது பென்னகர் அருகில் வரும்போது டயர் வெடித்து பேருந்து விபத்துக்குள்ளாகியது. இதனால் படுகாயம் அடைந்த மனோகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து அவர் நஷ்ட ஈடு கேட்டு […]
