கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறி சம்பந்தப்பட்ட பள்ளி பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதோடு, பேருந்துகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது பள்ளி நிர்வாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பள்ளியை திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என பள்ளியை நிர்வகிக்கும் லதா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த […]
