தனியார் நிலத்தில் இறந்து கிடந்த மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சீனாபுரம் அருகிலுள்ள தலையம்பாளையம் பகுதியில் மயில்கள் சுற்றி திரிகின்றன. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நேற்று காலையில் 7 மயில்கள் இறந்து கிடந்துள்ளன. அவ்வழியாக சென்ற நபர்கள், இச்சம்பவம் பற்றி ஈரோடு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, மயில்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]
