சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பத்மாவதி சீனிவாசன் நகரில் முத்துகுமரகுரு(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லலிதா(42) என்ற மனைவியும், குரு சஞ்சனா(18), குரு அவந்திகா(14) என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதில் முத்துகுமரகுரு வங்காளதேசத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனைவி மற்றும் மகள்களை பார்ப்பதற்காக வந்த முத்துக்குமரகுரு வீடு மற்றும் நகைகளை விற்று வேறு இடத்தில் புதிதாக வீடு மற்றும் கார் வாங்கலாம் என தெரிவித்துள்ளார். […]
