தொழிலாளர்களின் பங்கு தொகையை செலுத்தாமல் பணத்தை மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், போத்தனூரில் தனியார் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் அந்தோணி. இவர் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் செலுத்தவேண்டிய பணத்தை வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளார். இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரிகள் மைதிலிதேவி, விஜயலட்சுமி ஆகியோர் ஆய்வு நடத்தியபோது […]
