திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவை சாப்பிட்டதில் 14 குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சமூக நலப் பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி உள்ளிட்ட பலர் நேரில் சென்று காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு அமைச்சர் கீதா […]
