வாலிபர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிபடை போலீஸ் அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் என்பவர் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் போந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் இரவு 11 மணி அளவில் தனது நண்பர் கமலுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர்கள் பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது 4 பேர் அறிவாளால் […]
