வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்துள்ள கரட்டுபட்டியில் கோட்டைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று கொலை செய்துவிட்டு அவரது உடலை கிணற்றில் தூக்கிப் போட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சென்ற காவல்துறையினர் கோட்டைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் […]
