தூத்துக்குடி கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செல்வராணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தந்தை, மகன் இருவரின் உடலையும் 3 மருத்துவர்களைக் கொண்ட குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை […]
