தேனி மாவட்டத்தில் தந்தை மகனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தையை அரிவாளால் தாக்கிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள ஜக்கம்மாநாயக்கப்பட்டி போஸ் பஜாரில் அழகுராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் லோகேஷ்(21) திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா நோய்த்தொற்றால் லோகேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் வேலைக்கு போகாமல் ஊரிலேயே இருந்துள்ளார். […]
