நிலத்தகராறில் தந்தை-மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆண்டியகவுண்டனூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிமுத்து, துரைசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அண்ணன்-தம்பி இருவரிடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 4-ந்தேதி காளிமுத்து தனது விளை நிலத்தில் டிராக்டர் ஓட்டி வந்த துரைசாமியின் மகன் சிவராமனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்து, அவரது மனைவி கமலாத்தாள், மகன் பழனிச்சாமி ஆகியோர் துரைசாமியை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். […]
