தந்தை இறந்த சோகத்தில் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு மலைராஜா என்ற மகனும், மதுமிதா என்ற மகளும் இருந்துள்ளனர். மேலும் ஆறுமுகம் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் தந்தை இறந்த சோகத்தில் மதுமிதா மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் சரியாக சாப்பிடாமல் வேலையை முடித்துவிட்டு தூங்கியுள்ளார். […]
