சிவகங்கையில் குடும்ப தகராறில் மகன், தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாலுக்கோட்டை கிராமத்தில் முனியாண்டி என்பவர் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராக்கு என்ற மனைவியும், பொன்னி என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். மணிகண்டன் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று குடும்ப தகராறு காரணமாக ராக்குவுக்கும், முனியாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முனியாண்டி […]
