சொத்து தகராறில் தந்தையை பெற்ற மகனை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், திண்டல் வேப்பம்பாளையம் பிரிவு பகுதியில் வசித்து வந்தவர் பழனிசாமி(68). இவருக்கு ருக்குமணி என்ற மனைவியும், பிரியதர்ஷினி என்ற மகளும், ரவிகுமார்(37) என்ற மகனும் உள்ளார்கள். பிரியதர்ஷினி கல்யாணமாகி கணவருடன் வசித்து வருகின்றார். ரவிக்குமாருக்கு இன்னும் திருமணயாகவில்லை. இவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் ரவிக்குமார் தனது தந்தையிடம் சொத்தை தனது பெயரில் […]
