தந்தையும்,மகளும் விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கைலாசபுரம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆலம்பாடி பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சாய் பிரநித்தா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் முருகன் தனது மகளான சாய் பிரநித்தாவை வயல்வெளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வயலில் உள்ள திறந்தவெளி விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக சாய் பிரநித்தா தவறி விழுந்து விட்டார். […]
