சென்னிமலை பகுதியில் குடிநீர் சீராக வர வேண்டும் என்று பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை முகாசிபிடாரியூர் அருகிலுள்ள கூற பாளையம் காலனி பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் நேற்று காலை 7 மணி அளவில் சென்னிமலை – பெருந்துறை சாலையில் காலி குடங்களை வைத்துக்கொண்டு சாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து […]
