ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில் டிசம்பர் 3-ம் தேதி படபடா, கசைபடா, ஷாகஞ்ச் மற்றும் பயானியா போன்ற பகுதிகளை சேர்ந்த 86 பேர் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முதன்மை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் புஷ்பேந்தர் குப்தா கூறியதாவது, செவ்வாய்க்கிழமை மாலை வரை மொத்தம் 86 பேர் அசுத்தமான தண்ணீர் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் […]
