குளத்தில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோபாலபுரத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி(52) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று தனலட்சுமி அப்பகுதியில் இருக்கும் குளத்திற்கு அருகே வேப்ப முத்துகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தனலட்சுமி குளத்திற்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனலட்சுமி உடலை மீட்டு […]
